Monday, January 25, 2010

மாலை நேர பாடசாலை


திருச்சி மாவட்டம், புங்கனூர் கிராமத்த்தில் தற்போது இலவச மாலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி செல்லும் மற்றும் பள்ளி இடை நிறுத்தம் செய்த மாணவர்கள் 29 பேர் பயன் பெறுகிறார்கள்.
இந்த பாடசாலையின் நோக்கமானது குழந்தை தொழிலாளர்களை முற்றிலுமாக ஒழிப்பது மற்றும் வறுமையின் காரணமாக பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது. தரமான கல்வி மற்றும் நாகரீக வளர்ச்சி போன்றவற்றை அளிப்பது. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளை ஆறுதல் மையம் வழங்கி வருகிறது. இது போன்ற பாடச்சாலைகள் இன்னும் ஐந்து கிராமங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் இந்த சேவையில் கலந்துகொண்டு தங்களால் இயன்றதை செய்ய அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். இந்த சேவைகளில் பங்காளர்களாக சேர விருப்பமுள்ளவர்கள் கீழ் காணும் தொலைபேசி மற்றும் அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.
0431-2483143 , 9444101794.
"வாருங்கள் ஒன்றுபடுவோம் குழந்தைகளை காப்போம்"

No comments:

Post a Comment